குறளின் குரல் !
*********
" ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார் "
பொருள் -
*********
அறிவுடையவர்கள் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு, இருக்கின்ற முதலை இழந்து விடும் காரியத்தை ஒருபோதும் செய்யமாட்டார்கள், என்று, செயல்படுபவர்கள் புத்திசாலித்தனமான முடிவு எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறார், தெய்வப் புலவர் நம் திருவள்ளுவர்.
' இருக்கிறத விட்டுட்டுப் பறக்கறதுக்கு ஆசைப் படக் கூடாது '
' லாபம் அதிகமாகக் கிடைக்கிறதே என்பதற்காக விதை நெல்லை விற்பவன் முட்டாள் '
' தினமும் ஒரு பொன் முட்டையிடும் வாத்தை அறுத்தால் அதிக முட்டைகளை உடனே அடையலாமே ' என்று ஆசைப்பட்டு, உள்ளதையும் இழந்தவன் கதையெல்லாம் நமக்குத் தெரியும் !
இதிலிருந்து என்ன தெரிகிறது ?
ஆசைக்கு முன்னுரிமை கொடுத்தால் அறிவு மங்கிவிடும், என்பதுதானே !
சுலபமாகப் பணம் சம்பாதிக்க என்ன வழி ?
ஒருவன் செய்திப் பத்திரிக்கை ஒன்றில் விளம்பரம் செய்திருந்தான்..
இவ்வாறு !
' நீங்கள் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆக வேண்டுமா ? எனது முகவரிக்கு ஒரு ரூபாய் மணியார்டர் அனுப்பி வையுங்கள். அந்த இரகசியத்தைக் கூறுகிறேன் ' இதுதான் அந்த விளம்பரம்.
அவ்வளவுதான் செய்தியைப் படித்தவர்கள் அனைவரும் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்கிற பேராசையில் பணம் அனுப்பி வைத்தார்கள் !
இரண்டு நாட்கள் கழித்து அதே பத்திரிக்கையில் மற்றுமொரு விளம்பரம்..
' அன்பர்களே.. என் விளம்பரத்தைப் பார்த்து ஒரு கோடி பேர் எனக்கு ஒரு ரூபாய் அனுப்பி வைத்தார்கள். நான் இப்பொழுது கோடீஸ்வரன் ஆகி விட்டேன். இது தான் அந்த ரகசியம் ' என்று அந்த விளம்பரம் இருந்ததாம்.
இது எப்படி இருக்கு ?
இந்தக் கதை அனைவருக்கும் தெரியும் என்றாலும்...
தெரிந்தும் குறுக்கு வழியில் பணம் சேர்க்க நினைக்கும் ஆசையில் இருந்து இன்னும் யாரும் விடுபட வில்லையே ?
நாளைக்குக் கிடைக்கும் பிரியாணியை விட, பசிக்கும் போதே கிடைக்கும் பழைய சோறு அமிழ்தமல்லவா ?
இந்த,
ஞானக்கண் திறக்க வேண்டும். இந் நாநிலத்தில் மனிதர்க்கெல்லாம்.. அறிவில்,
ஊனக்கண் படைத்தோரெல்லாம் உண்மையை உணர்ந்து நாளும் உள்ளத்தில் தெளிதல்
வேண்டும்.
கூன், குருடு, செவிடு நீங்கிய குறையில்லா பிறப்பே, நமக்கு இறைவன் கொடுத்த பெரிய லாபம் !
வான் புகழும் வள்ளுவன் குறளால் அறிவில் வலிமை பெற்று உயர்ந்து வாழ்ந்து, வளமை பெற்றால் அதுவே போதும் !
நானும் கவிதை எழுதிப் பார்த்தேன்...
நன்றாயிருக்கிறதோ... இல்லையோ...?
நல்ல கருத்துக்களை உங்கள் உள்ளத்தில் சேர்த்தேன் !
அந்த மகிழ்ச்சியோடு...
இனிய காலை வணக்கம், நண்பர்களே !
மதுரை G.பாலு.
24-06-2019
திங்கட்கிழமை.