அன்பிற்கினிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் !
கடந்த ஓராண்டு காலமாக...உயர் வள்ளுவம் தந்த 'குறளின் குரலை ' உங்களின் பொன்னான உள்ளத்தில் ஏற்று, என் எழுத்திற்கு உற்சாகம் அளித்து வந்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி !
குறள் கூறிய உன்னத கருத்துக்களை அறிந்து, புரிந்து படித்து வந்திருப்பீர்கள். என் அறிவிற்குட்பட்ட விஷயங்களை, நான் பார்த்த, படித்த, கேட்ட அனுபவங்களோடு உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்.
நான் எழுதிய கருத்துக்களில், குற்றம், குறைகள் இல்லாமல் இருக்காது !
எந்தத் தவற்றையும் எடுத்துக் காட்டாமல், நீங்கள் பொறுமையாகப் படித்து வந்தது உங்களின் உயர்ந்த உள்ளத்தைக் காட்டுகிறது.
தெரியாமல் தவறு செய்வது மனித இயல்பு !
தெரிந்தே தவறு செய்வது மனித இழிவு !
குறள் கூறும் அறிவுரைகளைப் பின் பற்றி அறவழியில் நடந்தால், நாம் மறந்தும் பிறருக்குத் தீங்கிழைக்க மாட்டோம்.
'மிக வலிமையான கருத்துக்களை உங்கள் முன் வைக்கவில்லை' என்றாலும், சொல்ல வந்த விஷயங்களை மிகவும் எளிமையாக எடுத்துரைத்திருப்பேன் என நம்புகிறேன்.
எழுத்துலகிலும், இலக்கியப் படைப்புகளிலும் இமாலய சாதனைகளைப் படைத்த ஆற்றல் மிக்க 'ஜாம்பவான்கள் ' மத்தியில், இருக்கும் இடமே தெரியாமல், அறிவில் சிற்றெறும்பு போன்ற நிலையில் உள்ள நான், கற்றறிந்த விஷயங்களை உங்களோடு மனம் திறந்து பகிர்ந்த கொண்டதைப் புனிதமான பணியாக நினைத்து, இது என் தாய்த் தமிழுக்கு நான் செய்த சிறு தொண்டாகக் கருதித் தமிழ்த் தாயின் திருவடிகளில் சமர்ப்பிக்கின்றேன் !
தினந்தோறும் எழுதிவந்த ' குறளின் குரலுக்கு ' சற்று இடைவெளி விடுகிறேன் !
இறைவனின் அருளோடு, வள்ளுவரின் ஆசியோடு திரும்பவும் உங்களோடு பேச வருவேன்.
உங்களின் அன்பான ஆதரவிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி !
இனிய காலை வணக்கம், நண்பர்களே !
மதுரை G.பாலு.
25-06-2019
செவ்வாய்க் கிழமை.

No comments:
Post a Comment